Tuesday, August 23, 2016

         SEED அறக்கட்டளை ஒரு முன்னுரை...


     1987-1992 ஆம் ஆண்டு பாளையந்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற நாங்கள் ஒரு வருடம் முன் சந்தித்த பொழுது வகுப்பு தோழன் முரளியின் இழப்பை கனத்த இதயத்துடன் நினைவு கூர்ந்தோம்
      நாங்கள் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தவன், சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் அரக்கனிடம் போராடி தோற்று போனான். சிகிச்சைக்கு பெருந்தொகை தேவைபட நாங்கள் உதவினோம்.

       இது மாதிரியான எதிர்பாராத இன்னல்கள் நம் தோழர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் வரும் போது உதவும் பொருட்டு ஒரு அறக்கட்டளை  (TRUST) ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் தோன்றியது

     முரளியின் நினைவால் கண்ணில் வழிந்த கண்ணீரால் ஈரமாயிருந்த இதயத்தில் அந்த விதை ஆழமாக பதிந்தது .
     அதற்கு விதை (SEED) என பெயரிட்டோம். ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி ,பொதுமக்களுக்கு நோயணுகாமல் வாழ வழிகாட்டுதல் என எங்கள் நோக்கம் விரிவடைந்தது .

     வலையுலக தோழமைகளே !

    இந்த வலைப்பூவின் நோக்கம் எங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளை மட்டும் சொல்வதல்ல ...

    வலது காதுக்கு ஒரு சிறப்பு மருத்துவர், இடது கைக்கு ஒரு சிறப்பு மருத்துவர் என தேடி அலையும் மக்களுக்கு, உங்கள் முதன்மை மருத்துவர் சமையல் அறையிலும், அஞ்சரை பெட்டியுள்ளும் இருக்கிறார் என்று சித்தர்களும் , தமிழ் குடி முன்னோர்களும் சொல்லி சென்றதை உங்களுக்கு அறியத்தருவதும் தான்.

அதற்கான மருத்துவ கட்டுரைகளையும், நல்லுணவு கட்டுரைகளையும் தர இருக்கிறோம்

    இந்த ஆர்கானிக் வலைப்பூவின் மாசற்ற வாசத்தை சுவாசிக்க வாருங்கள் வாசகர்களே.....